Categories
தேசிய செய்திகள்

தனியார் கல்வி நிறுவனங்களிலும் இ.எஸ்.ஐ சட்டம் பொருந்தும் …!!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ சட்டம் பொருந்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதாசுமந்த், பிடி ஆஷா, ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர் கே.எம் விஜியன் வாதிட்டார்.  அப்போது கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா, இல்லையா ? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளதால் தமிழக அரசின் உத்தரவை அமுல்படுத்த முடியாது என்றார்.  தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா, இல்லையா ? என்பது மட்டுமின்றி பல்வேறு சட்ட கேள்விகள் இந்த வழக்கில் எழுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும்  இ.எஸ்.ஐ சட்டம் பொருந்தும் என்று தீர்ப்பளித்தனர்.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ எனப்படும் தொழிலாளர் காப்பீட்டுத் சட்டம் பொருந்தும் என தமிழக அரசு கடந்த 2010ஆம் ஆண்டு அறிவிப்பு ஆணை வெளியிட்டது. இதனை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இருவேறு அமர்வுகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கினர். இதனால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு  இந்த வழக்கை மாற்றி  தலைமை நீதிபதி திரு.ஏ.பி ஷாகி உத்தரவிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |