Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை” தனியார் நிறுவன மேற்பார்வையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பாஸ்கரன் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரனுக்கு கண்பார்வை மங்க தொடங்கியதால் சிகிச்சைக்காக மதுரைக்கு செல்ல வேண்டும், அதற்கு பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பாஸ்கரன் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் சூசை நகர் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் பிணம் கிடப்பதாக முத்தையாபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த நபர் பாஸ்கரன் என்பதும், அவர் அந்த இடத்தில் ஒரு துண்டு காகிதத்தில் என் சாவிற்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாஸ்கரனின் உடலை உடனடியாக கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |