பணம் வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியரை தந்தை, மகன் இருவரும் இணைந்து மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மாணிக்கம்பட்டி கிராமத்தில் சூர்யா என்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் வசித்து வருகின்றார். இந்நிலையில் பணம் வசூல் செய்வதற்காக சூர்யா புதுப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பணம் கேட்டு சென்ற சூர்யாவிடம் ஆலடி என்பவரும், அவரது மகன் மாதவனும் சேர்ந்து தகராறு செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் சூர்யாவை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதுகுறித்து சூர்யா அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தந்தை மகன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.