தஞ்சை பெரிய கோவிலின் கோபுரங்களில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தஞ்சை பெரிய கோவிலும் ஓன்றாகும். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த கோவில் ராஜ ராஜ சோழனால் கிபி. 10 நூற்றாண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 5 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் இருக்கும் கோபுரங்கள் ஜொலிப்பதை போல் தஞ்சை பெரிய கோவிலிலும் ராட்சத மின் விளக்குகளைக் கொண்டு கோபுரங்களை அலங்கரித்து இரவு நேரத்தில் கோவிலின் கோபுரங்கள் ஜொலிக்க வைக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கோவில் மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் எறிய விடப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த சோதனை வெற்றி அடையும் என தொல்லியல் துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும் வருகின்ற 11ஆம் தேதி மகா சிவராத்திரி அன்று முதல் இந்த வழக்குகளை நிரந்தரமாக எரியவிடப்படும் என தொல்லியல் துறை வட்டாரங்களில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.