Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் கொல்லப்பட்ட ரவுடி… அலறியடித்து ஓடிய மக்கள்… தஞ்சாவூர் அருகே பரபரப்பு…!!

தஞ்சாவூரில் ரவுடி தலையை துண்டித்து கொலை செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி(35). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிரஞ்சீவி  பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சியில்  கோழிக்கறி கடை நடத்தி வந்தார்.  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக சிரஞ்சீவி  மாலை அணிந்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை ஐயப்பன் கோவில் செல்வதற்கு தேவையான பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக பெரிய கடைத் தெருவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்கள் சிரஞ்சீவி மோட்டார் சைக்கிள் அருகே வந்து அவரை வழிமறித்தனர்.

பின்னர் அவர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிரஞ்சீவியை வெட்டியுள்ளார் .இதில் சிரஞ்சீவியின் தலை துண்டாகி  சாலையில் விழுந்தது. அவரது  உடல் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தது. சினிமா பாணியில் நடைபெற்ற கொலையை பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர். கொலையை செய்து விட்டு மூவரும்  எந்த வித பதற்றமும் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் திரும்பி  சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு  தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிரஞ்சீவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த சிரஞ்சீவியின் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள்  நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில்  பட்டுக்கோட்டை பெருமாள் தெருவைச் சேர்ந்த கபி  என்கிற கபிலனுக்கும் சிரஞ்சீவிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இவர்கள் இருவரின் பெயர்களும்  காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சிரஞ்சீவி கொலை செய்யப்பட்டுள்ளதால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது சிரஞ்சீவியால் பாதிக்கப்பட்ட வேறு யாரும் கொலை செய்தனரா? என்று  பல கோணங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |