Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் எதிரொலி…. மூடப்பட்ட தஞ்சை பெரிய கோவில்…. பக்தர்கள் இன்றி நடந்த சனிப்பிரதோஷம்….!!

தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷம் பக்தர்கள் யாருமின்றி எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இந்த கோவிலுக்கு உள் மாநிலத்தில் மட்டுமின்றி வெளி மாநிலத்திலும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வருவதுண்டு. ஆனால் கொரோனாவிற்கு பின்னர் வெளிநாட்டினரும் வெளி மாநிலத்தினரும் வருவதில்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் எதிரொலியாக கடந்த 16 பெரிய கோவில் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம் போல நடை பெற்று வருகின்றது.

குறிப்பாக பிரதோஷத்தின் போது பெரிய கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது வழக்கமான ஒன்று. அதிலும் சனிப்பிரதோஷத்தின் போது பக்தர்கள் பெருமளவில் கோவிலுக்குள் வருவர். ஆனால் சனி பிரதோஷமான கடந்த சனிக்கிழமை பெரிய கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நந்திக்கும் சிவபெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், பால் போன்ற மங்கலப் பொருட்கள் அபிஷேகம் நடைபெற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றுள்ளது. மேலும் சனி பிரதோஷத்தின் போது பக்தர்கள் யாருமின்றி பெரிய கோவில் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

Categories

Tech |