Categories
சினிமா தமிழ் சினிமா

நன்றி C.M சார் …. அதிகாலை 12.01 AM ….. வெறித்தனமான நன்றி ….!!

பிகில் பட சிறப்பு கட்சிக்கு அரசு அனுமதி அளித்ததால் தயாரிப்பாளர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும் போது தீபாவளி சிறப்பு காட்சிக்கு எந்த படத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் , தயாரிப்பு நிறுவனம் முறையான அனுமதி பெற்று அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என்பதை உறுதியளித்தால் சிறப்பு காட்சிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

Image result for BIGIL KADAMBUR RAJI

இதோடு அதிக கட்டண வசூல் செய்வதால் தான் அரசு பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்  நடிகர் விஜய் நடித்த பிகில் படத்துக்கு சிறப்பு காட்சி வழங்க அனுமதி வழங்க வேண்டுமென்று தயாரிப்பு நிறுவனமான  AGS கல்பாத்தி அகோரம் சார்பில் , பிகில் பட சிறப்பு கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று கடிதம் அனுப்பபட்டது.மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்க படமாட்டாது என்றும் அந்த கடிதத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Image result for Archana Kalpathi BIGIL

இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு நாளை ஒருநாள் மட்டும் பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி வெளியிட அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் அரசு வசூலித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டு என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. சிறப்போடு கட்சி அனுமதியை அடுத்து அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இரவு 12.01 அதிகாலையில் ட்வீட் செய்துள்ளார்.

Categories

Tech |