தளபதி ஸ்டாலின் அவர்களே நீங்கள் தமிழக மக்களின் மனதை கட்டாயம் வெல்வீர்கள் என்று கலைஞர் நினைவு நாளின் சிறப்பு நிகழ்வான பொது கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பின் தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, கவிஞர் வைரமுத்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தற்பொழுது பொதுக்கூட்டத்தில் பேசி வருவதாவது, உழவனுக்கு இலவச மின்சாரம் அளித்து உழவனின் நண்பன் ஆக, தோழனாக இன்றளவும் அனைத்து விவசாயிகளின் மனதிலும் நீங்காமல் கலைஞர் கருணாநிதி திகழ்ந்து வருகிறார். அவரது இந்த திட்டத்தால் பயன் அடைந்தவர்களில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
பொது கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், தளபதி ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு நன்றி இவ்வளவு பெரிய மைதானத்தில் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட கூட்டத்தின் நடுவே கலைஞரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி நீங்கள் வெல்வீர்கள்.. வெல்வீர்கள்.. என்று கூறி அவரது உரையை முடித்துக்கொண்டார்.