மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையமே சின்னம் ஒதுக்கும் . அந்த வகையில் இந்தியா முழுவதும் 39 அங்கீகாரம் வழங்கப்படாத கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கியது . அதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது .
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் . இது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல் பொருத்தமான சின்னம் தான். தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் என்று தந்து ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். @maiamofficial தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 10, 2019