அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி. இவர் ஜேம்ஸ் பாண்ட் படமான ‘டை அனதர் டே’ படத்தில் நடித்திருந்தார். அது தவிர சூப்பர் ஹீரோ சப்ஜெக்டான ‘எக்ஸ் மேன்’ படங்களில் ஸ்டோர்ம் என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்றார்.53 வயதான ஹாலே பெர்ரி தற்போது தற்காப்பு கலையை மையமாக கொண்டு உருவாகிவரும் ‘ப்ரூயிஸ்ட்’ ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இதனிடையே இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்தபோது ஹாலே பெர்ரி எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். இடுப்பு பகுதியில் காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே ஹாலே பெர்ரி, தன்னுடைய காயம் குறித்து இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு அப்டேட் வழங்கியிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், நான் காயமடைந்தது முதல் என் மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி. சொந்தமாக சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது இதுபோன்று நடப்பது வழக்கம்தான். சோர்வுக்கும் எனக்கும் வெகு தூரம். நான் நன்றாக விழித்துக்கொண்டேன். அதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறேன் என பதிவிட்டிருந்தார். ‘ப்ரூயிஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
https://www.instagram.com/p/B5F-xTfjayw/?utm_source=ig_web_button_share_sheet