மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் நபர்களுக்கு அதை பற்றிய முழு விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்நிலையில் பைக் விலை உயர்ந்த பொருள் என்பதால் திடீரென ரிப்பேர் ஏற்பட்டால் உடனே மெக்கானிக்கிடம் எடுத்து செல்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். அதன்பின் பைக் ஓட்டுபவர்கள் தங்களுடைய பைக்கின் இயக்கவியல் மற்றும் அவை எவ்வாறு வேலை செய்கின்றது என்பது குறித்த அடிப்படையை தெரிந்து வைத்திருப்பது அவற்றை பராமரிக்க, பயணங்களை சிறப்பாக்க உதவியாக இருக்கும். உங்கள் மோட்டார் சைக்கிளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து என்னென்னெ பார்ட்ஸ்கள் எப்படி வேலை செய்கிறது என்பதையும், அவற்றை நாம் எவ்வாறு சிறந்த முறையில் பராமரிப்பது என்பதையும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பைக்கை பராமரிக்க சில முக்கிய டிப்ஸ்:
பைக்கை சுற்றி நடக்க வேண்டும். இது வேடிக்கையான முறையாக இருந்தாலும் உங்கள் மோட்டார் சைக்கிளை நீங்கள் முற்றிலும் சுற்றி அனைத்து பார்ட்ஸ்களையும் பார்த்தது எப்போது என்று யோசித்து பாருங்கள். நீங்கள் தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிளை பயன்படுத்துவதால் அதில் இருக்கும் பார்ட்ஸ்களும் படிப்படியாக சிறிது சேதமடைந்து இருக்கலாம். இல்லை என்றால் தேய்ந்து போய் இருக்கலாம். எனவே நீங்கள் பைக்கை முழுமையாக ஆய்வு செய்யும் போது கவனிக்கப்பட வேண்டிய குறைபாடுகள் அவை தீவிரமாவதற்கு முன்னரே உங்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது. இதில் ஏதேனும் லீக் இருக்கின்றதா என பார்க்கலாம், ஃபோர்க் லோயர்களில் காணப்படுகின்ற ஆயில் ஃபெயிலிங் ஃபோர்க் சீலை குறிக்கிறது.
முதலில் டயர்களில் பிரஷரை செக் செய்யவும். நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பாக பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு பைக்கின் டயர் பிரஷரை செக் செய்வது அவசியம். அதன் பிரஷர் குறைந்தால் டயர் பிளாட் ஆகிவிடும் இல்லை என்றால் வேகமாக செல்லும் போது டயர் அடிபட வாய்ப்பு இருக்கிறது. உங்கள் பைக்கின் பிரஷர் செக் செய்வதன் மூலமாக டயர்களில் இருக்கும் PSI எண்ணை சரிபார்த்து தேவைக்கேற்ப காற்றை நிரப்ப வேண்டும்.
இதனையடுத்து பைக்கின் என்ஜினில் இருந்து பின்புற சக்கரங்களுக்கு டார்க்கை மாற்ற டிரைவ் செயின் முக்கிய பொறுப்பாகும். எனவே இதை சரியாக பராமரிக்காவிட்டால் மிகவும் ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு ரைடுக்கும் பின் டிரைவ் செயின் சூடாக இருக்கும் போது செயினை லூப்பிரிகேட் செய்வது ஒரு ஸ்மார்ட் ப்ராக்டீஸ் ஆகும். இப்படியே செய்வதால் செயினின் ஒவ்வொரு இணைப்பிற்கும் ஆயில் செல்கின்றது. இதேபோல் செயினின் டென்ஷனை சரியாக வைத்திருப்பது மோட்டார் சைக்கிளின் ஆயுளை நீட்டிக்கும்.
அடுத்தபடியாக எப்போதும் எஞ்சின் ஆயில் முழுமையாக வைக்கவும். பின்னர் எஞ்சின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் ஆயில் கிளாஸை சோதனை செய்து முழு கொள்ளளவில் இல்லை என்றால் அதை நிரப்பி வைத்துக் கொள்ளவும். இதே போல என்ஜின் ஆயில் கருப்பாகி விட்டால் உடனடியாக அதை மாற்றுவது மிகவும் முக்கியம். இதனையடுத்து அட்வென்ச்சர் மற்றும் ஸ்ட்ரீட் பைக்குகளில் இருக்கும் ஏர் பில்டர்களை ஒவ்வொரு 500 கிலோ மீட்டருக்கும் ஒரு முறை க்ளீன் செய்ய வேண்டும் அல்லது அதை மாற்ற வேண்டும். உங்கள் மோட்டார் சைக்கிளில் ஏர் ஃபில்டர் நிலையை ஆய்வு செய்ய ஏர்பாக்ஸை தூக்கி ஃபில்ட்டரை பிரிக்கவும், ஃபில்ட்டர் தூசி நிறைந்ததாகவும், அடைத்திருப்பது போலவும் தெரியவந்தால் அதை மாற்றவும் அல்லது சுத்தம் செய்து விட்டு மீண்டும் பொருத்த வேண்டும்.