Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வருக்கு நன்றி…. ”கடவுள் அவரை ஆசிர்வதிப்பார்”…. பிரசாந்த் கிஷோர்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து தன்னை நீக்கிய முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டுவந்த அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், சமீபகாலமாக நிதிஷ் குமாரின் முடிவுகள் குறித்து விமர்சித்துவந்தார்.

இதனிடையே, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்தை எதிர்த்து கடுமையாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர், அக்கட்சியிலிருந்து தான் ராஜினாமா செய்யப்போவதாககக் கூறிவந்தார். இதன் காரணமாக, பிரசாந்த் கிஷோர்-முதலமைச்சர் நிதிஷ் குமார் இடையே பிளவு அதிகரித்தது.

இந்தச் சூழலில், கட்சி விதிகளை மீறி பிரசாந்த் கிஷோர் செயல்பட்டதால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக நிதிஷ் குமார் இன்று அதிரடியாக அறிவித்தார்.

பிகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், “நன்றி நிதிஷ் குமார் அவர்களே. பிகார் முதலமைச்சராக நீண்டகாலம் நீடிக்க என்னுடைய வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்று நக்கலாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து கேள்வியெழுப்பிவந்த அக்கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான பர்வேஷ் வர்மாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |