நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “சுமார் 129 நாட்கள் இடைவெளி ஏதுமின்றி நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த பயணமானது என் மனதை விட்டு நீங்காது ஆழமாக பதிந்துள்ளது. என் மீதும் எனது குழுவின் மீதும் நம்பிக்கை வைத்த விஜய் அண்ணாவிற்கு எனது நன்றிகள். இத்தகைய மலைபோன்ற பணியை இயக்குனர்கள் குழுவின் உதவியின்றி நிச்சயம் செய்திருக்க முடியாது. அவர்களை எண்ணி நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.