தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1 1\2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் சந்தனகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகனும், 1 1\2 வயதில் ஸ்ரீதர்ஷன் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். தற்போது பார்வதி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பார்வதி வீட்டில் அமர்ந்து பீடி சுற்றிக் கொண்டிருந்தார்.
அங்கு 2 குழந்தைகளும் வீட்டின் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தை ஸ்ரீதர்ஷன் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில் பார்வதி தனது குழந்தை ஸ்ரீதர்ஷனை தேடிய போது அவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.