தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள புத்தக்கல் கிராமம் வழியாக ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இந்நிலையில் கொளத்துகுழி, பள்ளத்து வளவு, கருமூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பிற பகுதிகளுக்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர். எனவே ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.