Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிப்பதற்கு சென்றபோது… தாத்தாவுக்கும், பேரனுக்கும் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்தில் தாத்தாவும், பேரனும்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள தோணுகால் பகுதியில் விவசாயியான மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாரிமுத்து, ரமேஷ் என்ற 2மகன்களும், மல்லிகா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாரியப்பனுக்கு திருமணமாகி மணிமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ஹரிவர்ஷன் என்ற குழந்தை இருந்துள்ளது. இதில் மாரியப்பன் தனது பேரனான ஹரிவர்ஷனிடம் மிகவும் அன்பாக இருந்ததால் எங்கே சென்றாலும் குழந்தையை தோளின் மீது தூக்கிக்கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் மாரியப்பன் தனது பேரனான ஹரிவர்ஷனை தோளில் தூக்கிக் கொண்டு வயலில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது மாரியப்பனிடம்  குழந்தை தாத்தா எனக்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டதால் பேரக் குழந்தையை தூக்கிக்கொண்டு அப்பகுதியில் அமைந்துள்ள கிணற்று பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மாரியப்பன் தனது பேரக் குழந்தையுடன் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதனையடுத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு கிணற்றுக்குள் யாரோ  குதிப்பது போல் சத்தம் கேட்டு  விரைந்து சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அங்கு மாரியப்பன் தனது பேரக்குழந்தைகளுடன் கிணற்றக்குள் உள்ள தண்ணீரில் மூழ்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றுக்குள் குதித்து தேடி பார்த்துள்ளனர். ஆனால் அதற்குள் மாரியப்பனனும், குழந்தை ஹரிவர்ஷனும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து அவர்களின் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பன் மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |