மழை குறைந்த காரணத்தினால் விவசாயிகள் அனைவரும் தீவிரமாக நடவு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணத்தினால் பெரும்பாலான குளங்கள், ஏரிகள் என அனைத்து நீர்நிலைகள் அனைத்தும் தண்ணீர் நிரம்பி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை குறைந்துள்ளதால் வீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் சம்பா நடவு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கின்றனர். இதனையடுத்து வயலில் புகுந்த தண்ணீரை வரப்புகளை வெட்டி வெளியேற்றிய விவசாயிகள் தற்போது டிராக்டர் மூலம் நிலங்களை உழுது சமன் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து நாற்று நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.