மளிகை கடையில் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பூச்சி இருந்தது குறித்து வருவாய் அலுவலரிடம் வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாலையில் இருக்கும் மளிகை கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் பாட்டிலை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த குடிநீர் பாட்டிலின் உள்ளே பூச்சி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் இம்மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரனிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் பல பகுதிகளில் காலாவதியான பால் பொருட்கள், சாக்லெட் பொருட்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் போன்றவைகளை விற்பனை செய்து வருவதாக புகார் வந்துள்ளது. மேலும் அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.