Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்கே செல்ல வேண்டாம்…. முகாமிட்டுள்ள யானைகள்…. வனத்துறையினரின் அறிவுரை….!!

ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் பெரும்பாலான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றது. இந்த யானைகள் தண்ணீர் மற்றும் உணவிற்காக இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த நிலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான முட்புதர் காட்டில் முகாமிட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதிமக்கள் விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர்   யானைகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனையடுத்து யானைகள் முகாமிட்டிருக்கும் முட்புதர் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அப்பகுதி மக்களுக்கு அறிவுரை வழங்கினர். இவ்வாறு முட்புதர் காட்டில் முகாமிட்டிருக்கும் யானைகள் மீண்டும் இரவில் அப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதிக்கு சென்று விடுவதால் அதனை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |