Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து வழிபாடு…. நீர்நிலைக்கு செல்லும் பொதுமக்கள்…. அலைமோதும் கூட்டம்….!!

வீட்டில் வைத்து வழிபட்டு பூஜைகள் செய்த விநாயகர் சிலைகளை ஏரி குளங்களில் பொதுமக்கள் கரைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் வீட்டின் முன்பாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபட்டுள்ளனர். அதன்பின் அவ்வாறு வழிபட்ட சிலைகளை ஏரி மற்றும் குளங்களில் கரைந்துள்ளனர்.

இதனையடுத்து இம்மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முன்பாக வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை ராஜாநகர் மற்றும் எமப்பேர் ஏரிகளில் கொண்டு வந்து கரைத்து செல்கின்றனர். இதனை தொடர்ந்து சங்கராபுரம் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் தங்களின் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடைவீதி பகுதியில் இருக்கும் சக்தி விநாயகர் கோவிலின் வாசல் படியில் வைத்து சென்றுள்ளனர்.

Categories

Tech |