Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தந்தை இறந்த சோகத்தில்…. மகள் உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை இறந்த சோகத்தில் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு மலைராஜா என்ற மகனும், மதுமிதா என்ற மகளும் இருந்துள்ளனர். மேலும் ஆறுமுகம் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் தந்தை இறந்த சோகத்தில் மதுமிதா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சரியாக சாப்பிடாமல் வேலையை முடித்துவிட்டு தூங்கியுள்ளார்.

இதனையடுத்து தம்பி மலைராஜா மதுமிதாவை எழுப்பியுள்ளான். ஆனால் மதுமிதா எழும்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்த இளையராஜா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தாய் மதுமிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மதுமிதா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |