Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தந்தை இறந்ததால் படிப்பை தொடர முடியாத மாணவன்…!!

தந்தை இறந்ததால் படிப்பை தொடர முடியாத சூழலில் இருக்கும் பட்டியல் என மானவனுக்கு 8 லட்சம் ரூபாய் அளித்தால்தான் மாற்றுச் சான்றிதழ் அளிக்க முடியும் என்று கல்லூரி நிர்வாகம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

ஒட்றைப்பிடாரத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற மாணவன் இந்த புகாரை கூறியிருக்கிறார். திருச்சி மாவட்டம் சிறுதன் ஊரில் உள்ள நாளந்தா வேளாண்மை கல்லூரிகளில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை செலுத்தி பிஎஸ்சி மேலாண்மை படிப்பை அவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனாவால் போதிய வருமானமின்றி அவதிப்பட்ட மாணவனின் தந்தை உயிரிழந்தார்.

உயிரிழந்ததால் படிப்பை தொடர முடியாத நிலையில் மாற்றுச் சான்றிதழை மாணவன் கேட்டுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் 8 லட்சம் ரூபாய் அளித்தால் மட்டுமே மாற்றுச் சான்றிதழை அளிக்க முடியும் என்று கூறிவிட்டதாக மாணவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கல்லூரி வாயிலில் அமர்ந்து மாணவனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டியல் என மாணவன் என்பதால் அரசு உதவித் தொகை இல்லையேல் படிக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் கூறிய நிலையில் இரண்டாம் ஆண்டில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் கேட்டதாக மாணவன் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

ஆனால் மாணவன் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்தில்தான் படித்ததாகவும், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான எட்டு லட்சத்தை செலுத்தினால் அவரது மாற்று சான்றிதழை செலுத்த தயாராக இருப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டாள் மறுக்க கூடாது என்று கோவை வேளாண்மை பல்கலை கழகம் கூறுகின்றது.

Categories

Tech |