தந்தை இறுதி சடங்கில் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள ரெட்டி குப்பம் பகுதியில் நரசிங்கு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் நரசிங்கு திடீரென உயிரிழந்ததால் அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அப்பகுதி மக்கள் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது இறுதி சடங்கை செய்து கொண்டிருந்த சுரேஷ்குமார் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதற்குப் பிறகு சிறிது நேரத்தில் சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து தந்தை மகன் இருவரின் இறுதி சடங்குகளையும் உறவினர்கள் ஒரே சமயத்தில் நடத்தியுள்ளனர்.