Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய தந்தை…. மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை கடனுக்காக மகனை அடித்துக் கொலை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட சிறுவள்ளூர் பகுதியில் முனியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் வசிக்கும் செல்வம் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கிய பணத்துக்கு வட்டியும், அசலும் சேர்த்து செல்வத்திடம் கொடுத்த நிலையில் 6,000 ரூபாயை முனியன் பாக்கி வைத்திருந்திருக்கிறார்.

அதன்பின் பாக்கி பணத்தை வாங்குவதற்காக செல்வம் மற்றும் அவரின் நண்பரான பழனி ஆகிய 2 பேரும் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது முனியனின் மகனான ஆட்டோ ஓட்டுனர் விஜயகுமார் என்பவருக்கும் செல்வதற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கோபம் அடைந்த செல்வம் அருகிலிருந்த விறகு கட்டையால் விஜயகுமாரின் தலையில் ஓங்கி அடித்ததில் படுகாயமடைந்த அவர் மயங்கிக் கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பழனி மற்றும் செல்வம் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |