Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போட்டு இருக்காங்க…. ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியும்…. பாய்ந்து அடித்த சிபிஐ ….!!

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் மீது பொய் வழக்கின்  அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ள சிபிஐ காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது.

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ்  இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறையிலிருக்கும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்  ஜாமீன் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி திரு பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. ஜெயராஜ், பெனிக்ஸ் தாக்கப்பட்டதற்கும் ஸ்ரீதருக்கும் எவ்வித  தொடர்பும் இல்லை என்றும் முதுகு எலும்பு பிரச்சனை இருப்பதால் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என ஸ்ரீதர் தரப்பில் வாதிடப்பட்டது.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயராஜ், பெனிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு தொடர்பான விசாரணை குறிப்பை வழக்கின் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Categories

Tech |