Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தந்தை மகன் கொலை வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை…!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக திருச்செந்தூரில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகுகனேஷ், பாலகிருஷ்ணன் பால் துறை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த அரசு பரிந்துரை செய்ததை அடுத்து டெல்லி சிபிஐ கூடுதல் எஸ்பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ குழுவினர் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் சுக்லா தலைமையிலான ஆறு அதிகாரிகள் ஜெயராஜ் உறவினர் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் பெண் தலைமை காவலர் பியூலா செல்வகுமாரியிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

Categories

Tech |