Categories
தற்கொலை நாமக்கல் மாவட்ட செய்திகள்

தந்தை திட்டியதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…சோகத்தில் குடும்பத்தினர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில், தந்தை திட்டியதால் மனமுடைந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருக்கு சுபாஷ் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். சுபாஷ் அங்கு கோழி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 29ஆம் தேதி அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அவரது தந்தை ராஜேந்திரன், இப்படி குடித்து கொண்டே இருந்தால் உனக்கு எப்படி திருமணம் ஆகும்? என்று கேட்டுள்ளார். இதனைக்கேட்ட சுபாஷ் மிகவும் கவலையுற்றார். அதன்பின் மறுநாள் அதிகாலை அவரது  வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டுக் கொண்டார். அதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் அவர் வீட்டிலேயே இறந்துவிட்டார் என்று அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினர். மேலும் இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |