Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அதுக்கு இப்படியா செய்யணும்” மகன் செய்த வேலை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

இடத் தகராறு காரணமாக சொந்த சித்தப்பாவையே கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துள்ளார். இந்நிலையில் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடமானது கழனிவாசல் பகுதியில் அமைந்துள்ளது. இதனையடுத்து ஆறுமுகத்தின் உறவினர்கள் இந்த இடத்தை விற்று பங்கு பிரித்துக் கொண்டுள்ளனர். அந்த பங்கில் ஆறுமுகத்தின் அண்ணன் பெருமாள் என்பவரின் மூன்றாவது மகன் சரவணனுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டிய இருந்துள்ளது.

மேலும் சரவணன் இந்த பணத்தை தரக்கோரி அண்ணன் மனைவி முத்துக்கண்ணுவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையறிந்த ஆறுமுகம் சமரசம் பேச முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆறுமுகத்தை கம்பால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் இறந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமதி சாய்பிரியா சரவணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து 5,500 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Categories

Tech |