மது அருந்திவிட்டு தந்தையை தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சங்கர் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சங்கர் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு அடிக்கடி தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு ஏற்பட்ட தகராறில் தந்தையை சங்கர் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து சங்கரின் தந்தை எனது மகன் தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுகிறான் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சங்கரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.