பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் மீது உரிய நடவடிக்கையை எடுப்பதற்கு மகள் புகார் கொடுத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 18 வயது பெண் மாமல்லபுரத்தை சேர்ந்த அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் மந்திரவாதி போர்வையில் சபல புத்தி உள்ள தனது தந்தை என்னை பாலியல் தொல்லை செய்ய முயன்றதாகவும், என் தங்கைக்கு ஒருமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரை வாங்கிக்கொள்ளாமல் என்னுடைய தந்தை அவரைத் தாக்கியதாக கொடுத்த புகாரின் பெயரில் எனது அண்ணனை காவல்துறையினர் கைது செய்து, என்னையும் கைது செய்ய முயற்சித்து வருகின்றனர்.
எனவே என்னுடைய தந்தையை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் அந்த மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத கேளம்பாக்கம் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக காவல்துறை தலைவர், வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி, தேசிய மனித உரிமைகள் ஆணையம், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோருக்கும் தனித்தனியாக புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.