Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தந்தையுடன் சண்டை… “துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட மகன்”… கொலையா?… போலீசார் விசாரணை!!

திருச்சி மாவட்டத்தில் 18 வயது இளைஞர் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் உள்ள தாதகவுண்டம்பட்டியில் பாலசுப்பிரமணியன்(18) என்பவர் வசித்து வந்தார். இவர் இருசக்கர பழுதுபார்க்கும் தொழிலை செய்து வருகிறார். இவரின் தந்தை அழகர். இந்நிலையில்  பாலசுப்பிரமணியனுக்கும்  தந்தை அழகருக்கு நேற்று இரவு மது போதையில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.  இதனால் இரவு 9 மணிக்கு வீட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை பாலசுப்ரமணி எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தாடைப் பகுதியில் சுடப்பட்ட நிலையில் அருகிலிருந்த புளியந்தோப்பில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் பாலசுப்ரமணியன் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சடலம் கிடந்த காட்டுப்பகுதியில் உடைந்து கிடந்த நாட்டு துப்பாக்கியை  போலீசார் கைப்பற்றினர். எனவே சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அவரின் தந்தை காணாமல் போனதால் அவர் தான் கொன்றாரா?

Categories

Tech |