உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி நீதிமன்றத்தில் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து என்னை விடுவியுங்கள் என்று வழக்கு தொடுத்துள்ளார்.
அமெரிக்க நாட்டின் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் உலகப்புகழ் பெற்றவர் ஆவார். இவர் தனது கணவரை 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார். அதன் பின் ஸ்பியர்ஸ் தனது தந்தையின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது வீட்டிலிருந்து வெளியேறி சாம் அஸ்காரி என்ற ஈரான் நாட்டைச் சேர்ந்தவரை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரிட்னி ஸ்பியர்ஸ் லாஸ் ஏஞ்சல் நீதிமன்றத்தில் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி வேண்டும் என்று வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது பிரிட்னி ஸ்பியர்ஸ் கூறியதாவது “என் தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் அவரின் பாதுகாப்பில் இருந்து என்னை விடுவியுங்கள். அவர் என் வாழ்க்கையை அளிப்பதை நிறுத்துங்கள் என்றும் நான் என் தந்தை மீது புகார்களை தெரிவிக்கவே இங்கு வந்தேன்” எனவும் நீதிபதியிடம் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து நீதிபதி இந்த வழக்கில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனக்கு சொந்தமாக ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பிரிட்னி ஸ்பியர்ஸ் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் அங்கு பரபரப்பானது.