தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரின் படம் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்கு நல்ல வெற்றி கிடைத்தது. அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படமும் வெளியாகி நல்லா வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் வாத்தி படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் சார் என பெயரிட்டப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்திற்கு தனுஷ் தற்போது தயாராகி வருகிறார் . இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்கு பின் தனுஷ் தெலுங்கில் ‘ஃபிடா லவ் ஸ்டோரி’ படங்களை இயக்கிய சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.