Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு…. “நேர்மையான அங்கீகாரம் கிடைக்கும்”.. அலுவலகத்தில் பொறுமை தேவை!!

தனுசுராசி அன்பர்களே…!!  இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஒன்பதாவது இடத்தில் சஞ்சரிக்கிறார் இன்று  எதிலும்பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்று பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும்அவர்களை விட்டுக்கொடுத்துப் போங்கள். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும்.

தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்படலாம் .வெளியிடங்களில் உங்களின் மதிப்பு உயரும். இன்று நீர்வழி தொழிலால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வாகனப்பயணங்களால் சிறு மாற்றம் ஏற்படும் ஆலய வேலைகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலை அமையும்.இன்று உங்கலுக்கு நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் அலுவலகத்தில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.வீண் விவாதம் செய்யாதீர்கள் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் பக்குவமான அணுகுமுறை நல்லது.

இன்று முக்கியமான காரியங்களுக்கு வெளியே  செல்லும் போது வெள்ளை நிற ஆடையை அணிந்துகொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு.

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

 

Categories

Tech |