Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மனதிற்கு நெருக்கமான படம்”…. ஒரு வருடம் நிறைவடைந்தது…. கேக் வெட்டி கொண்டாடிய தனுஷ்….!!!

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் கர்ணன். இப்படத்தில் லால், பூ ராம், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையில் தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து திரை உலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இப்படத்தை பாராட்டினர். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய சாதனை படைத்தது.

இந்த நிலையில் கர்ணன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதனை கலைப்புலி தாணு, மாரி செல்வராஜ், தனுஷ் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “கர்ணன் என் மனதிற்கு நெருக்கமான படம். அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். தனுஷின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |