தனுசு ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு எதிர்த்து பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகளின் எதிர்கால கனவுகளை நிஜமாக்குவீர்கள். சிக்கனத்தை கையாள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். காவல் துறை சம்பந்தப்பட்ட மனக்கலக்கம் அகலும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகி செல்லும். இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி கல்வியில் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறும். புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைப்பதால் தாராளமனா அளவில் பொருளாதாரம் மேம்படும்.
சமூகத்தில் உங்களுக்கு அக்கறை இருப்பதால் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். உயர் அதிகாரியிடம் பேசும்போது மட்டும் நிதானமாக இருங்கள். தேவையில்லாத வாக்குவாதத்தில் எப்போதுமே ஈடுபடவேண்டாம். இன்று காதலர்களுக்கு இனிமை காணும் நாளாக இருந்தாலும் பேச்சில் கட்டுப்பாடு அவசியம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு உணவாக . கொடுங்கள் உங்கள் தோஷங்கள் அனைத்தும் விலகி செல்வ செழிப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : நீலம் பச்சை மற்றும் நீல நிறம்