தனுசு ராசி அன்பர்களே, இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். யோசனைகளைக் கேட்டு நடந்தால் நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும். இன்று தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும்.
அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். பயணம் மூலம் வியாபாரமும் தொழில் விரிவாக்கமும் விரிவடையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உங்களுடைய நிதிகள் மேலும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் மூலம் கடின பணிகளை எளிதாக செய்து முடிப்பார்கள்.
இன்றைய நாள் வெளிவட்டாரத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும், கல்வியில் வெற்றி பெறக் கூடிய சூழ்நிலையும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை முழுமையாக செய்யுங்கள் அனைத்து விஷயமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம் நிறம்