Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு.. பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.. வசதி வாய்ப்புகள் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே,  இன்று ஆன்மிகப் பெரியோரின் அன்பும், ஆசியும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

சிந்தனை திறன் பெருகும், இன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.  தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருங்கள்.

இன்று  ஆயுதங்கள், நெருப்புகள்  பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். இன்று  மாணவச் செல்வங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. படித்ததை எழுதிப் பார்ப்பது ரொம்ப, ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்பொழுது வெள்ளை நிறத்தில் அல்லது கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களில் ஈடுபடுங்கள், அனைத்து காரியம் உடனே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீலம்

Categories

Tech |