Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..பொருளாதாரம் சீராக இருக்கும்..நினைத்தது வெற்றி அடையும்..!!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று பணிகளை கூடுதல் கவனத்துடன் செய்ய நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சூட்சுமங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை இன்று பாதுகாத்திட வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் பொருட்கள் வாங்கும் தேவை அதிகரிக்கும். மனைவியின் சேமிப்பு பணம் பயன்படும். இன்று ஓரளவு பொருளாதாரம் சீராக இருக்கும்.

நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை ஏற்படும். இன்று விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தூரதேச பயணம் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாகவே இருக்கும். பணவரவில்  இன்று எந்தவித மாற்றமும் இல்லை.

இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் சிறப்பாகவே இருக்கும். பெரும் சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் நிறம்

Categories

Tech |