தனுசு ராசி அன்பர்கள்,
இன்று குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் இன்று உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். எதிராக பேசியவர்கள் வழிந்து வருவார்கள் வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள் இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சு மூலம் எல்லாவற்றையும் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள்.
புத்திர வழியில் மனவருத்தம் கொஞ்சம் ஏற்படலாம், மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் கொஞ்சம் ஏற்படலாம் கவனமாக இருங்கள்.இன்று எந்த ஒரு விஷயத்தையும் யோசனை செய்து செய்யுங்கள். முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள் தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரைஎந்த பிரச்சனையும் இல்லை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணத்தின் போது பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவ செல்வங்கள் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்கள் பெறக்கூடும்.. ஆசிரியர்களின் அன்பு கூடியவர்களாக மாறுவார்கள்
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்