தனுசு ராசி அன்பர்களே…!! இன்று வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாளாக இருக்கும். வருங்கால நலன் கருதி புதிய முடிவுகள் எடுப்பீர்கள். இடம் பூமி விற்பனையில் பிரச்சனை கொஞ்சம் ஏற்படும். தொழில் மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் உருவாகும். இன்று காரியத்தடை தாமதம் கொஞ்சம் உருவாகலாம். திடீர் மன வருத்தங்கள் போன்றவை ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.
பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். எல்லா வகையிலும் இன்று நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். விட்டுச் சென்ற நண்பர் மீண்டும் வந்து சேருவார்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்