தனுசு ராசி அன்பர்கள்…
இன்று புதிய நம்பிக்கை ஏற்படும் நாளாக இருக்கும். மாற்றாரையும் மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில் வளம் பெற இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். ஆதாய பணவரவு கிடைக்கும், வழக்கு விவகாரத்தில் அனுகூலம் வளரும், இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். உஷ்ணம் சம்பந்தமான நோய் வரக்கூடும். அடுத்தவரைப் பார்த்து எதையும் செய்ய தோன்றலாம், அதனை விட்டு விடுவது ரொம்ப நல்லது.
இனிய காரியம் கைகூடும் வீண் அலைச்சல் குறையும். சிக்கலான பிரச்சினையும் நல்ல முடிவு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும், எதைப் பற்றியும் சிந்திக்காமல் நீங்கள் உங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தி காரியத்தில் ஈடுபடுங்கள் அது போதும். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் எதிர்பாராத வகையில் முன்னேற்றம் இருக்கும். அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று நீங்கள் மிக முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் இளம் மஞ்சள் நிறம்