Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு.. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. வாக்குவாதத்தில் ஏற்படாதீர்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பண வரவால் மனம் மகிழும். எப்படிப்பட்ட காரியத்தையும் ஓரளவு சிறப்பாகவே செய்வீர்கள். போக்குவரத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு கொஞ்சம் தேவைப்படலாம். இன்று  திறமையுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய திறமை இன்று பாராட்டுக்களை பெறும். மற்றவருடன் வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

முடங்கிக்கிடந்த காரியங்கள் அனைத்துமே வேகம் பிடிக்கும், நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தயவுசெய்து மன குழப்பம் அடைய வேண்டாம். பண நெருக்கடி உங்களுக்கு குறையும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாடு தகவல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

 அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |