தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய திறமைக்கு ஏற்றார் போல் வாய்ப்புகள் அமையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். இன்று திறம்பட நீங்கள் செயல்படுவீர்கள். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலனை கொடுக்கும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது ரொம்ப நல்லது. அவர்களது முன்னேற்றத்திற்காக இன்று பாடுபடுவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பயணங்கள் ஓரளவு சாதகமான பலனை கொடுக்கும்.
நட்பு மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்