தனுசு ராசி அன்பர்களே, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள் தெய்வீக நம்பிக்கை கூடும். வியாபாரிகளுக்கு வருமானம் சிறப்பாகவே இருக்கும். நல்ல முன்னேற்றமான நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் இருக்கும். வாக்கு வன்மையால் தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி பெருகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். உங்களுடைய அந்தஸ்தும் உயரும். நிலுவையில் இருந்த பணமும் வந்து சேரும். இன்று புகழ்மிக்க நாளாக உங்களுக்கு அமையும். மாணவர்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். ஆசிரியர்களின் அரவணைப்பும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வணங்குவதால் அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்