Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..பழைய பாக்கிகள் வசூலாகும்… தேவையான உதவிகள் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் சேர்க்கும் எண்ணம் உருவாகும். இன்று  நட்புகள் கூடும். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல்கள் வந்து சேரும். அயல்நாட்டு முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

தேவையான பணம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் ஏற்படும். இன்று மாணவச் செல்வங்களுக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் செல்லும், விளையாட்டை ஏரங்கட்டிவிட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்டநிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |