தனுசு ராசி அன்பர்களே.! பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது.
இன்று வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளை மட்டும் தொடர்ந்து செய்ய வேண்டும். அதிலும் கூடுதல் கவனம் வேண்டும். பண வரவு சிறப்பாக இருக்கும். எதையும் சமாளிக்கும் மனநிலை இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடைகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி கிடைக்கும். எதையும் பொறுமையாக யோசித்து எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சினைகள் பெரிதாக இருக்காது. உங்களுடைய சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். மனதிற்குள் தேவையற்ற பயம் விலகி விட்டால் தைரியம் தானாக வரும்.
கணவன் மனைவி இருவருக்கும் ஒற்றுமை பலப்படும். பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது. காதலில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழல் இருக்கும்.. பிரச்சனையான காதலில் கூட நல்ல மாற்றங்கள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். கல்வியில் மென்மேலும் உயர முடியும். மேற்காணும் முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் எளிமையாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு