தனுசு ராசி அன்பர்களே.! பிரச்சனைகள் இல்லாத நாள்
இன்று வழக்குகள் சாதகமாகும். வளர்ச்சி கூடிவிடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சிரமம் எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் அனுசரணைகள் உண்டாகும். உங்களுடைய பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். நேரம் தவறாமல் எந்த வேலையும் செய்யுங்கள். அலட்சியம் காட்ட வேண்டாம். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை மாறி சந்தோஷம் குடிகொள்ளும்.
உறவினர்களால் நேர்மையான சூழல் இருக்கும். மாமன் மைத்துனன் வகையில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடிவிடும். இனிமையான சூழல் ஏற்படும். காதல் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது. இனிமையை ஏற்படுத்திக் கொடுக்கும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். கல்விக்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மட்டும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் வெள்ளை