தனுசு ராசி அன்பர்களே.! கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் இருக்கும்.
இன்று நிதானித்து செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் வழக்கத்தைவிட பணிச்சுமை அதிகமாக இருக்கும். உடல் சோர்வு காணப்படும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ள முடியாத சூழல் இருக்கும். சீரான அளவில் பணவரவு இருக்கும். அதனை சேமிப்பாக மாற்ற வேண்டும். பெண்கள் நகைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இரவலாக கொடுக்கவும் வாங்கவும் வேண்டாம். மனவருத்தத்தில் விட்டுச் சென்ற உறவினர்கள் மீண்டும் ஒன்று சேர கூடும். கண்டிப்பாக உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் இருக்கும். மாணவர்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். கல்விக்காக சில முடிவுகளை எடுக்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.
இல்லத்தில் ஒற்றுமைக்காக நீங்கள் பாடுபடுவீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக அமையும். காதலில் உள்ளவர்களுக்கு சிக்கல்கள் எதுவும் பெரிதாக இல்லை. ஒரு சூழ்நிலையைப் புரிந்துகொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு