Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! முன்னேற்றம் ஏற்படும்….! கவனம் தேவை….!!

தனுசு ராசி அன்பர்களே.! தேவைகள் பூர்த்தியாகும்.

இன்று முன்னேற்றம் அதிகரிக்கும். உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் வீட்டிற்கும் நல்ல காரியம் வந்து சேரும். இல்லத்தில் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து அவர்கள் மூலம் நல்ல பெயர் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கலைதுறையில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் உண்டு. யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

பண பொறுப்புகளை அடுத்தவர்களிடம் கொடுக்க வேண்டாம். எந்த செயலில் ஈடுபட்டாலும் கவனம் தேவை. கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு கோபம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். காதலில் உள்ளவர்கள் பக்கமாக நடந்து கொள்ள வேண்டும். காதல் உங்களுக்குக் கைகூடி விடும். மாணவர்களின் செயலில் தெளிவு இருக்கும். பெற்றோர்களிடம் கோபங்கள் வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் இருக்கின்றது.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் கரு நீலம்

Categories

Tech |